Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

News

CrowdStrike-Microsoft செயலிழப்பு

72

என்ன காரணம், அது எப்போது சரி செய்யப்படும், ஆபத்துகள் என்ன? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

CrowdStrike-Microsoft செயலிழப்பு இணைய வரலாற்றில் மிக பெரிய பேரிழப்பு. வெள்ளிக்கிழமை (நேற்று) அதிகாலையில் மிகப்பெரிய IT விபத்து நிகழ்ந்தது, இதனால் நிதித் துறை (பங்குச் சந்தை, வங்கிகள் ), பொதுப் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, பெருநிறுவனங்கள், ஊடக ஒளிபரப்பு போன்ற துறைகளும் Microsoft மென்பொருள் செயலிழப்பால் உலகலகளவில் பெரும் பாதிப்புக்குள்ளாகின.

மைக்ரோசாப்ட் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, CrowdStrike உலகளவில் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் ஒரு அறிக்கையை X தளத்தில் வெளியிட்டனர். “இந்த பாதிப்பையும் அதன் இழப்புகளையும் நாங்கள் நன்றாக அறிந்துள்ளோம், மேலும் வாடிக்கையாளர்களுக்கு இது சம்மந்தமான தொழில்நுட்ப வழிகாட்டுதல் மற்றும் ஆதரவை வழங்குவதற்கும் எந்த இழப்புகள் இன்றி கணினிகள் மீண்டும் செயல்பட CrowdStrike நிறுவனத்துடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம் என்றும் அறிக்கையில் கூறினார்.

CrowdStrike CEO George Kurtz

இது சைபர் தாக்குதல் அல்ல” என்று CrowdStrike CEO ஜார்ஜ் கர்ட்ஸ் தெளிவுபடுத்தினார்.

“[Microsoft] Windows ஹோஸ்ட்களுக்கான ஒற்றை உள்ளடக்க புதுப்பிப்பில் குறைபாடு இருப்பதாகவும், “Falcon n sensor.”க்கு இந்த சிக்கல் Windows இயங்குதளம் மற்றும் CrowdStrike மென்பொருளில் இயங்கும் கணினிகளை பாதித்ததாகவும் அவர் கூறினார்.

இதனை பிரச்சனையாக கருதாமல் விடுமுறையாக கொண்டாடிய ஊழியர்கள் நெட்டிசன்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts