Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Sports
  • பிசிசிஐ (BCCI), பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்காக இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ரூ.8.5 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது.
Sports

பிசிசிஐ (BCCI), பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்காக இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ரூ.8.5 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது.

55

ஒலிம்பிக் என்பது, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒரு பெரிய சர்வதேச பல விளையாட்டு நிகழ்வாகும் . ஒலிம்பிக்கின் தொடக்க விளையாட்டுப் போட்டிகள் 1896 ஆம் ஆண்டு கிரீஸின் ஏதென்ஸில் நடைபெற்றன , மேலும் சமீபத்திய விளையாட்டுப் போட்டிகள் 2021 ஆம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்றன .

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ( IOC) , விளையாட்டுகளை ஏற்பாடு செய்வதற்கும், ஒலிம்பிக் நடத்தும் நகரத்தின் தயாரிப்புகளை மேற்பார்வையிடுவதற்கும் உருவாக்கப்பட்டது. ஒலிம்பிக் போட்டியில்
பதக்கங்கள் வழங்கும் வழக்கம் 1904 இல் தொடங்கியது . ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும், முதல் இடத்துக்கு தங்கப் பதக்கங்களும் , இரண்டாம் இடத்துக்கு வெள்ளிப் பதக்கங்களும் , மூன்றாம் இடத்துக்கு வெண்கலப் பதக்கங்களும் வழங்கப்படும் .

2024 ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியானது ,பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற உள்ளது. இது 33வது ஒலிம்பிக் போட்டியாக உள்ளது. இது, ஜூலை 26-ல் தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
அதில் , 32 விளையாட்டுக்களில் 329 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். இதில் 200 நாடுகளில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்துக் கொள்ள உள்ளனர். அதில் 117 வீரர்கள் இந்தியாவின் சார்பில் களம் இறங்க உள்ளனர்.

ஒலிம்பிக் போட்டி நடைபெறவிருக்கும் இந்நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்காக ரூ.8.5 கோடிகளை வழங்குகிறோம்” என தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வாரியமாக அறியப்படும் பிசிசிஐ, கிரிக்கெட்டை மட்டுமின்றி இந்திய விளையாட்டுதுறைக்கும் , விளையாட்டு வீரர்களுக்கும் ஆதரவளித்து வருவது விளையாட்டு வீரர்களிடயே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எங்கள் விளையாட்டு வீரர்களுக்கு பிசிசிஐ ஆதரவளிக்கும் என்பதை தெரிவிப்பதில் நான் பெருமைப்படுகிறேன். அதற்காக ரூ.8.5 கோடிகளை IOAக்கு வழங்குகிறோம்” என தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எங்கள் விளையாட்டு வீரர்களுக்கு பிசிசிஐ என்றும் ஆதரவளிக்கும் என்பதை தெரிவிப்பதில் நான் பெருமைப்படுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வரும் 16ம் தேதி நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகள் மிக விரைவாகவும் , விமர்சியாகவும் நடைபெற்றுக் கொண்டுள்ளது. அந்த வகையில் வரவேற்பு நிகழ்ச்சிக்காக 162 ,படகுகள் மூலம் விளையாட்டு வீரர்கள் மற்றும் கலைஞர்களை செய்ன் நதிக்கு அழைத்து வந்து, சுமார் 6 கி.மீ தூரப்பாதையில் 4 மணி நேரம் தொடக்க விழா நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா அதிகமான பதக்கங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts