தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக அறிமுகமாகி இன்று படங்களில் ஹீரோவாக நடித்து வருபவர் சூரி . அவர் முதன் முதலில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். விடுதலை அவரின் சினிமா வாழ்வில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம். விடுதலையின் வெற்றிக்கு பிறகு அவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் அனைத்திலும் அவர் ஹீரோவாகவே நடிக்கிறார். அந்த வரிசையில் இப்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் , உருவாகியுள்ள கொட்டுக்காளி திரைபடத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தினை கூழாங்கல் படத்தினை இயக்கிய பி.எஸ் வினோத்ராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். இதன் பட்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது . இந்த படத்தின் கதாநாயகியாக மலையாள நடிகை அன்னாபென் நடித்திருக்கிறார். இந்த படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும் என தயாரிப்புக் குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.