தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான சூர்யா இன்று தனது 49 வது பிறந்த நாளில் கொண்டாடுகிறார். மக்கள் மத்தியில் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ரசிகர்களுக்கு இவரின் பிறந்த பிறந்தநாள் கொண்டாட்டமாக சூர்யாவின் 44 ல் உள்ள ஒரு கிலிம்ப்க்ஸ் வீடியோவை வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ஒரு பெரிய கட்டிடத்திற்க்கு வெளியில் நிறைய ஆட்கள் நின்று கொண்டு சூர்யாவிற்கு காத்துக்கொண்டுள்ளனர் போன்றும் , அவர் கட்டடத்தின் உள்ளிருந்து வெளியில் வரும்போது வாயில் சிகரெட் வைத்து கொண்டு முகத்தில் இரத்த கரையுடன் வெளியில் வருகிறார். வெளியில் வந்த உடன் ஒருவர் கையில் இருந்து துப்பாக்கியை வாங்குகிறார் போன்ற ஒரு காட்சியின் வீடியோவை தயாரிப்பு குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ரசிகர்கள் அவர்களின் பிறந்த நாளான இன்று அவரின் சூர்யா 44 படத்தின் பெயரை வெளியிடுவார் என எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் அதைவிட ஒரு பெரிய அப்டேட் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்தது. மேலும் இந்தப் படத்தினை கார்த்திக் சுப்புராஜ் இயக்கிவருகிறார். இந்த படத்தின் கதாநாயகியாக பூஜா ஹெக்டேவும் , கருணாகரன் , ஜெயராம் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். விரைவில் இந்த படத்தின் புதிய அப்டேட்டிற்காக அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்
இதனை கார்த்திக் சுப்புராஜ் தனது X தளத்தில் பகிர்ந்துள்ளார்.