இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் கொரியன் தொடர்களை அதிகமாக விரும்புகின்றனர். அந்த வகையில் கொரியன் தொடரான ” Squid Game ” என்ற தொடரின் முதல் பாகம் இளைஞர்களை பெரிதாக கவர்ந்து இருந்தது. அதன் இரண்டாம் பாகம் எப்போது வரும் என அனைவரும் எதிர்பார்த்து காத்து இருந்தனர். அவ்வாறு காத்து இருந்த Squid Game ரசிகர்களுக்கு அதன் வெளியீட்டு தேதியில் ஒரு புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அந்த தொடதின் இரண்டாம் பாகம் டிசம்பர் 26ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. இது ” Squid Game ” ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் இருந்த சுவாரசியம் குறையாமல் இன்னும் அதிகமான ரசிகர்களை கவரும் வகையில் இதன் இரண்டாம் பாகம் இருக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.