தனுஷ் ஒரு நடிகராக மட்டுமல்லாமால் ஒரு இயக்குநராகவும் சினிமா துறையில் வலம் வருபவர். அந்த வரிசையில் தற்போது தனுஷ் இயக்கிவரும் ” நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ” படம் ஒரு காதல் கலந்த காமெடி திரைப்படமாக இருக்கும் என தகவல் வெளிவந்தது. இந்தப் படம் அக்டோபர் 14ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியானது. இந்தப் படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், ப்ரியா பிரகாஷ் வாரியார், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரம்யா ரங்கநாதன், ரபியா கத்தூன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்க்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைக்கிறார். இன்று இந்தப் பட இசையின் ஒரு முக்கிய அப்டேட்டை ஜி.வி. பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்ட அந்த பதிவின் மூலம் இந்த படத்தின் முதல் பாடல் தனுஷ் குரலில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி விரைவில் இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.