இந்தியன் திரைப்படம் 1996ல் சங்கர் இயக்கத்தில் வெளிவந்தது. இதில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா,ஊர்மிளா மடோன்கர்,சுகன்யா போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை அடைந்தது. இன்றும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். இதன் இரண்டாம் பாகத்தை தற்போது சங்கர் இயக்கிருந்தார். அந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ் ஜே சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, காளிதாஸ் ஜெயராம், நெடுமுனி வேணு, விவேக், மனோ பாலா என தமிழ் சினிமா முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் கடந்த ஜூலை 12 அன்று திரையரங்குகளில் வெளியானது. மக்கள் இந்தியன் 2 படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். ஆனால், இந்த திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களையே அதிகம் பெற்றது. தற்பொழுது, நெட்பிளிக்ஸ் (Netflix) நிறுவனம் இந்த திரைப்படத்தை தனது ott தளத்தில் (09 ஆகஸ்ட் ) இன்று வெளியிட்டுள்ளது.