மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படைத்தில் அஜித் குமார், அர்ஜுன், திரிசா, ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத், ரவிச்சந்திரன் ஆகியோர் இசையமைத்துள்ளனர். அஜித், திரிஷா ஜோடிக்காகவே ரசிகர்கள் விடாமுயற்சியின் ரிலீஸ்காக காத்துக்கொண்டுள்ளனர் . படக்குழு இன்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக விடாமுயற்சி படத்தில் ஆரவ் இருக்கும் போஸ்ட்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்பொழுது இணையதளம் முழுவதும் ட்ரெண்டாகி வருகிறது.