Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Hollywood
  • அவதார் 3ன் டைட்டில் வெளியானது, டிசம்பர் மாதத்தில் வெளியாகிறது அவதாரின் அடுத்த பாகம்
Hollywood

அவதார் 3ன் டைட்டில் வெளியானது, டிசம்பர் மாதத்தில் வெளியாகிறது அவதாரின் அடுத்த பாகம்

28

அவதார் திரைப்படத்தின் கற்பனை காட்சிகள் சினிமா ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்தது. இந்த படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கியிருந்தார். இவர், அதற்கு முன்பு டைட்டானிக் என்ற மாபெரும் வெற்றிப் படத்தை கொடுத்தார். யாராலும் அந்த படத்தின் தாக்கத்திலிருந்து அவ்வளவு எளிதில் வந்துவிட முடியாது. இந்த படத்தின் கிளைமேக்ஸ் அந்த அளவில் அமைந்திருக்கும். இந்த படத்திற்கு பிறகுதான் இவர் அவதார் திரைப்படத்தை இயக்கியிருந்தார். அவதார் திரைப்படத்தின் முதல் பாகம் 2009ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில் சாம் வோர்த்திங்டன், ஜோ சல்டனா, இசுடீபன் லாங், மிச்செல் ரோட்ரிக்வெஸ், சிகர்னி வேவர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் “பண்டோரா” எனும் வேற்றுலகில் வளங்கள் அதிகமாக இருப்பதை அறியும் குழு தம் வளத்தட்டுப்பாட்டிற்கு தீர்வாக அவ்வுலக வளங்களை கவர்ந்து வர செய்ய முயல்கின்றனர். இதற்காக, தம்முள் ஒருவனை அக்குழு ஆளாக மாற்றி அனுப்பியும் வைக்கின்றனர். இவ்வாறு அனுப்பப்பட்டவனே பண்டோரா உலகினை பாதுகாக்க போராடுவதாக கதைகளம் அமைந்திருக்கும்.

அதனைத் தொடர்ந்து 2022ம் ஆண்டு அவதாரின் இரண்டாம் பாகம் வெளியானது. அதற்கு “தி வே ஆப் வாட்டார்” என பெயர் சூட்டிஇருந்தனர். இந்த பாகமும் பெரிதளவில் வெற்றி பெற்று நல்ல வசூல் வேட்டையை பெற்றது.

இப்பொழுது அவதாரின் இயக்குனரான ஜேம்ஸ் கேமரூன் அவதாரின் மூன்றாம் பாகத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார். அவதார் 3க்கு “பைர் அன்ட் ஹாஸ்” (Fire and Ash) என டைட்டில் வைத்துள்ளனர். இது, டிசம்பர் 19, 2025ல் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. இதுவரை இல்லாத பல பிரம்மாண்டமான காட்சிகள் இதில் இடம் பெருமென இதன் இயக்குனர் தெரிவித்துள்ளார். அவதார் ரசிகர்களிடையே இதன் மூன்றாம் பாகமான Fire and Ash பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts