Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • News
  • நாளை 78வது சுதந்திரவை விழாவை கொண்டாட உள்ள இந்தியா
News

நாளை 78வது சுதந்திரவை விழாவை கொண்டாட உள்ள இந்தியா

34

ஆகஸ்ட் 15ஆம், 1947 ஆங்கிலேய ஆட்சியிலிருந்து நம் நாடு இந்தியா சுதந்திரம் அடைந்தது. ஒவ்வொரு சுதந்திர நாளிலும் நம் நாட்டின் சுதந்திர வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக  இந்திய பிரதமர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்காக உறையாற்றுவார். ஒவ்வொரு மாநிலத்திலும் அதன் முதலமைச்சர் தேசிய கொடி ஏற்றி மக்களுக்காக சில நலத்திட்டங்களையும் அறிவிப்பார். அதுமட்டுமின்றி அரசு அலுவலகங்கள், பள்ளிகள் போன்ற முக்கிய இடங்களில் கொடி ஏற்றப்படும். அத்துடன் நிறைய விழாக்கள், பாரம்பரிய கலைகள் என கோலாகளமாக நம் நாட்டின் சுதந்திர தின விழா கொண்டாடப்படும். நாளை அகஸ்ட் 15, இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். இந்த வருடமும் அதே போன்று சிறப்பாக நம் நாட்டின் சுதந்திர தினம் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் நம் நாட்டின் சுதந்திர விழா தேசிய விடுமுறையாக அறிவிக்கப்படும்.

கொடியின் சிறப்பு:

செயின்ட் ஜார்ஜ் கோட்டை, இந்தியாவில் பிரிட்டிஸ்காரர்களால் அமைக்கப்பட்ட முதல் கோட்டையாகும். இது, சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. இன்று வரை இந்த கோட்டை பாதுகாக்கப்படுகிறது. இப்பொழுது இந்த கோட்டைக்குள் தமிழ்நாடு சட்ட மன்றம், அருங்காட்சியகம், தேவாலயம், வெல்லெஸ்லி ஹவுஸ், கொடி மரம் ஆகியவை உள்ளன. எப்பொழுதும், இந்த கோட்டை மிகுந்த பாதுப்புடனே இருக்கும். சுதந்திரத்திற்க்கு பிறகு நம் நாட்டில் முதல் முறையாக ஏற்றப்பட்ட நம் நாட்டின் தேசிய கொடி இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த தேசியக் கொடி 2.40 மீட்டர் அளவுள்ள தூய பட்டுத் துணியால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்புமிக்க தேசியக்கொடி சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் 2013ல் மக்களின் பார்வைக்கு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. நம் நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து பாதுகாக்கப்பட்டு வரும் ஒரே கொடி செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ளதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts