Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie reviews
  • தங்கலான் திரைப்படம் ரசிகர்களின் எதி்ர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா
Movie reviews

தங்கலான் திரைப்படம் ரசிகர்களின் எதி்ர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா

52

இன்று சுதந்திர தினத்தில் வெளியான விக்ரமின் “தங்கலான்” திரைப்படம் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. பா.ரஞ்சித் அவர்களின் இயக்கம் என்பதலே இன்னும் இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகமானது. அது மட்டுமல்லாமல் ஜி. வி. பிரகாஷ் அவர்களின் இசை இந்த படத்திற்கு மேலும் வலுவை சேர்த்துள்ளது. இன்று, இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடனும், எதிர்பார்ப்புடனும் இந்த திரைப்படத்தை கண்டுக்களிக்க திரையரங்கு செல்கின்றனர். இந்த படத்தின் காட்சிகள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்தது உள்ளது. தங்கத்தை தேடி செல்லும் ஆங்கிலேயர்களுக்கு விக்ரம் உதவி செய்வது போல் கதையை கொண்டு சென்றுள்ளார் இயக்குனர். இந்த கதையின் நாயகன் ஒன்று விக்ரம் எனில் ஜி.வி.பிரகாஷ் தனது இசையின் மூலம் மற்றுமொரு நாயகனாக இந்த திரைப்படத்தில் உள்ளார். அனைவரும் விக்ரம் அவர்களின் நடிப்பிற்க்காகவே இந்த திரைப்படத்தை பார்க்கலாம் எனவும் கூறி வருகின்றனர். அதைத்தவிர கதையின் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் இயக்குனர் அவர்கள் சிறப்பான முறையில் காட்சிபடுத்தியுள்ளார். பார்வதி, மாளவிகா என அனைவரும் அவர்களின் கதா பாத்திரமாகவே வாழ்ந்து உள்ளனர். தங்கலான் திரைப்படம் ரசிகர்களிடையே சில எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றாலும், பெரும்பாலும் தங்கலான் திரைப்படம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதாக சிலர் கூறிவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts