சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 170 வது திரைப்படமாக உருவாகிவரும் வேட்டையன் திரைப்படத்தை டி.ஜே. ஞானவேல் அவர்கள் எழுதி இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில், ரஜினிகாந்த், அமிதாப் பக்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார், ரித்திகா சிங், அபிராமி, துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்க்கு அனிருத் ரவிசந்தர் அவர்கள் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் 150 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடா ஆகிய மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. இந்த திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படமும் அக்டோபர் 10ம் தேதி வெளியாக உள்ள நிலையில் இரண்டு படமும் ஒரே நாளில் வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்த உள்ளது. இரண்டு திரைப்படத்தில் எந்த திரைப்படம் மக்களை பெரிதும் கவரும் என எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்து வருகிறது.