Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • பிரபாஸின் அடுத்த படம் இயக்குனர் ஹனு ராகவபுடியுடன், அடுத்த சரித்திர திரைப்படம்.
Movie Updates

பிரபாஸின் அடுத்த படம் இயக்குனர் ஹனு ராகவபுடியுடன், அடுத்த சரித்திர திரைப்படம்.

20

பாகுபலி படத்தின் மூலம் பான் இந்தியா முழுவதும் பிரபலமானவர் பிரபாஸ் அவர்கள். இவரின் சலார், கல்கி திரைப்படத்தை தொடர்ந்து இப்பொழுது இயக்குனர் ஹனு இராகவபுடியுடன் சேர்ந்து ஒரு படத்தில் கமிட்டாகி உள்ளார். இவரின், அனைத்து படங்களும் பெரும்பாலும் ஹிட் அடித்து வருகின்ற நிலையில் இவரின் புது படத்தின் பூஜை விழா ஒன்று கடந்த சனிக்கிழமை அன்று போடப்பட்டது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக இமான்வி அவர்கள் நடிக்க உள்ளார். மேலும் மிதுன் சக்ரவர்த்தி, ஜெயபிரபா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இந்த கதைக்களம் ஒரு வரலாற்று கதையாக உருவாக உள்ளது. இந்த திரைப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டாத நிலையில், இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தின் பூஜை விழாவின் போது எடுத்த சில புகைப்படங்களை தயாரிப்பு குழு தனது x தளத்தில் ஷேர் செய்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் வெளியாகும் என தயாரிப்பு குழு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts