2022ல் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் தற்பொழுது நடைபெற்ற 2024 தேசிய விருது வழங்கும் விழாவில் இரண்டு விருதுகளை தட்டி தூக்கியது.
இந்த திரைப்படத்தில் தனுஷ், நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை காமெடி கலந்த காதல் கதையாக மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கியிருப்பார்.
இந்த திரைப்படத்தில் சிறந்த நடிகைக்கான விருதை நித்யா மேனனும், மேகம் கருக்காத பெண்ணே பாடலுக்காக சிறந்த நடன கலைஞர் என்ற விருதை ஜானி மற்றும் சதிஷ் கிருஷ்ணன் ஆகியோர் பெற்றனர்.
இந்த விருதை பெற்ற நித்யா மேனன் இப்பொழுது இந்த திருச்சிற்றம்பலம் படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்த சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தனது சந்தோஷத்தை தெரிவித்துள்ளார்.