Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Technology
  • மெட்ரோ பயணிகள் டிக்கெட் எடுக்க இனி கால்கடுக்க நிக்க வேண்டிய அவசியம் இல்லை, உங்களிடம் வாட்ஸ் அப் மட்டும் இருந்தால் போதும் ஈசியாக டிக்கட் எடுக்கலாம்
Technology

மெட்ரோ பயணிகள் டிக்கெட் எடுக்க இனி கால்கடுக்க நிக்க வேண்டிய அவசியம் இல்லை, உங்களிடம் வாட்ஸ் அப் மட்டும் இருந்தால் போதும் ஈசியாக டிக்கட் எடுக்கலாம்

23

மெட்ரோ பயணம் என்பது பயனாளர்களுக்கு விரைவு பயணம் செய்ய உருவாக்கப்பட்டது. இதனை சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் இயக்குகிறது. சென்னையில் 2007-2008ல் இந்த மெட்ரோ திட்டம் திட்டமிடப்பட்டு, 2009ல் இதன் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. 2014ல் இதன் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு பல சோதனைகளுக்கு பிறகு ஜூன் மாதம் 2015ல் ஆலந்தூர் மற்றும் கோயம்பேடுக்கு இடையே பச்சை லைனில் மெட்ரோ திட்டம் செயல்பட தொடங்கியது. அதன் பிறகு செப்டம்பர் மாதம் 2016 ஆண்டில் புளு லைனில் சென்னை விமான நிலையம் மற்றும் லிட்டில் மவுண்ட் இடையே மெட்ரோ செயல்படுத்தப்பட்டது. அதன் பிறகு ஏஜி. டிஎம் எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரை புளு லைனில் நீட்டிக்கப்பட்டது.I இது மெட்ரோவின் முதல் கட்டமாக அமைந்தது.

இதன் பிறகு மெட்ரோ திட்டத்தின் இரண்டாம் கட்டமாக ,மேலும் ஊதா லைன், ஆரஞ்சு லைன் மற்றும் சிவப்பு லைன் என மூன்று பாதைகளில் மெட்ரோ திட்டம் நடைபெற்று கொண்டுள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் மக்கள் அனைவரும் தனது வாழ்க்கையை செம்மை படுத்திக்கொள்ளவும், தன்னை சார்ந்தவர்களுக்காகவும் எப்பொழுதும் ஏதாவது ஒரு வேலைக்காக ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இந்த டிராபிக் என்பது இன்றைய காலக்கட்டத்தில் அனைவரின் நேரத்தையும் எடுத்து சென்று விடுகிறது. அதற்கு ஒரு நல்ல வழியாக இந்த மெட்ரோ பயணம் உள்ளது. மெட்ரோவில் செல்லலாம் என்று அங்கு போனாலும் டிக்கெட் எடுக்க கால்கடுக்க நிக்க வேண்டியதுள்ளது. அதற்கு ஒரு மாற்று வழியாக இப்பொழுது உங்களின் மொபைல் போன் மூலமாகவே மெட்ரோ டிக்கெட்டை எடுத்துக் கொள்ளலாம். இதற்க்கு உங்களின் வாட்ஸ்அப் மட்டும் இருந்தால் போதும். உங்களின் வாட்ஸ்அப் சென்று, அதில் சென்னை மெட்ரோவின் நம்பருக்கு Hi என்று ஒரு மெசேஜ் அனுப்பினால் மட்டும் போதும். உங்களுக்கான மெட்ரோவின் அனைத்து விவரங்களும், டிக்கெட்டையும் பெற்றுக் கொள்ளலாம்.

சென்னை மெட்ரோ எண் 8300086000

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts