Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Hollywood
  • பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஆட்கொண்ட தி லயன் கிங்கின் அடுத்த பாகமாக வருகிறது “முஃபாஸா தி லயன் கிங்”
Hollywood

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஆட்கொண்ட தி லயன் கிங்கின் அடுத்த பாகமாக வருகிறது “முஃபாஸா தி லயன் கிங்”

28

ஆனிமேசன் படம் என்றாலே குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்கள் வரை உற்சாகத்துடன் கண்டுகளிப்பார்கள். அந்த வகையில் 1994ல் வெளியான தி லயன் கிங் என்ற அமெரிக்க ஆனிமேசன் திரைப்படம் அனைவரையும் கவர்ந்தது. அதனை 2019 ல் “தி லயன் கிங்” ரீமேக் செய்யப்பட்டு ஆங்கிலம் தவிர தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இப்பொழுது இதன் முன்பகுதி கதையை “முஃபாஸா தி லயன் கிங்” என்ற பெயரில் உருவாக்கியுள்ளனர். இதனை, ஜெஃப் நாதன்சனின் திரைக்கதையிலிருந்து பாரி ஜென்கின்ஸ் என்ற இயக்குனர் இயக்கிவருகிறார். இப்பொழுது இதன் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவற்பைப் பெற்று வருகிறது. இந்த ஆனிமேசன் திரைப்படம் அமெரிக்காவில் டிசம்பர் 20ம் தேதி வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் மூலம் வெளியிடுகின்றனர். தமிழில் விரைவில் “முஃபாஸா தி லயன் கிங்” வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts