விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் என மூன்று முன்னணி கதாபாத்திரத்தை வைத்து நகைச்சுவைக்கு பஞ்சமில்லாமல் எடுக்கப்பட்ட திரைப்படம்தான் நண்பன். இத்திரைப்படத்தை சங்கர் அவர்கள் இயக்கியிருந்தார். இலியானா அவர்கள் இந்த படத்தின் நாயகியாக நடித்திருப்பார். இந்த திரைப்படம் முழுவதும் மூன்று நண்பர்களின் நட்பை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இந்த திரைப்படம் 2012ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
இந்தப் படத்தில் சத்தியராஜ் அவர்களின் நடிப்பு அனைவரையும் ரசிக்கும் வகையில் அமைந்திருக்கும். இப்பொழுது, இந்தப் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை ஜீவா அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இப்பொழுது, அந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.