• Home
  • Sports
  • நிறைவு பெற்றது பாரிஸ் ஒலிம்பிக், இந்தியா வென்ற பதக்கங்களின் பட்டியல்
Sports

நிறைவு பெற்றது பாரிஸ் ஒலிம்பிக், இந்தியா வென்ற பதக்கங்களின் பட்டியல்

36

ஒலிம்பிக் உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டியாகக் கருதப்படுகிறது. பல்வேறு விளையாட்டுகளுக்கு நடத்தப்படும் அனைத்துலகப் போட்டியாக உள்ளது ஒலிம்பிக். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த முறை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைப்பெற்றன. இது 33வது ஒலிம்பிக் போட்டியாகும். ஜுலை 26ல் தொடங்கி அகஸ்ட் 11ம் தேதி வரை என 17 நாட்களுக்கு ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. 17 நாட்களில் 32 விளையாட்டுகள் வீதம் 329 போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் 10,714 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

இந்தியாவின் சார்பாக இந்த வருடம் 117 வீரர்கள் பங்கேற்றனர். அந்த வகையில் தமிழ் நாட்டிலிருந்து மட்டும் 13 விளையாட்டு வீரர்களும், அசாம் மாநிலத்திலிருந்து 1 வீரர் , பீகார் மாநிலத்தில் இருந்து 1 வீரர், சண்டிகர் மாநிலத்தில் இருந்து 2 வீரர், டெல்லியில் இருந்து 4 வீரர்களும், கோவாவில் இருந்து 1 வீரரும், குஜராத்திலுருந்து 2 வீரரும், ஹரியானாவில் இருந்து 24 வீரர்களும் , ஜார்கண்ட்டிலுருந்து 1 வீரரும் , கர்நாடகவில் இருந்து 7 வீரர்களும் , கேரளாவில் இருந்து 6 வீரர்களும் , மத்தியப்பிரதேசத்திலுருந்து 2 வீரர்களும், மகாராஷ்டிராவில் இருந்து 5 வீரர்களும் , மணிப்பூரில் இருந்து 2 வீரர்களும் , ஒடிசாவில் இருந்து 2 வீரர்களும் , பஞ்சாப்பில் இருந்து 19 வீரர்களும் , ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 2 வீரர்களும் , தெலுங்கானாவில் இருந்து 4 வீர்களும் , உத்தரகண்ட்டில் இருந்து 4 வீரர்களும் , உத்தர பிரதேசத்திலுருந்து 7 வீரர்களும் ,சிக்கீம் 1 வீரரும்,மேற்கு வங்கம் 3 வீரர்களும், ஆந்திர பிரதேசத்திலிருந்து 4 வீரர்களும் பங்கேற்றிருந்தனர்.

இப்பொழுது இந்த பாரிஸ் ஒலிம்பிக் நிறைவு பெற்ற நிலையில் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா 1 வெள்ளியும், 5 வெண்கல பதக்கமும் பெற்றுள்ளது. பெண்களுக்கான 10 மீ துப்பாக்கி சுடுதல் போட்டியில் மனு பாக்கர் ஒரு வெண்கலப்பதக்கமும், அடுத்ததாக 10 மீட்டர் கலப்பு இரட்டையர் பிரிவில் சரப்ஜோத் சிங் உடன் இனைந்து ஒரு வெண்கலப்பதக்கமும் வென்றார்.

ஸ்வப்னில் குசலே 50 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் ஒரு வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளார். இந்த பதக்கமே இவரின் முதல் ஒலிம்பிக் பதக்கமாகும்.

அமன் செஹ்ராவத் 57 கிலோ எடை பிரிவில் மல்யுத்தத்தில் ஒரு வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளி வென்றார். அனைவரும் தங்க பதக்கம் வெல்வார் என நினைத்திருந்த நிலையில் 89.45 மீட்டர் தூரம் வீசி இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளி பதக்கம் பெற்றார்.

இந்த வருடம் தங்கம் வெல்லும் என எதிர்ப்பாரக்கப்பட்ட இந்திய ஹாக்கி அணி வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது. 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 71வது இடத்தை பெற்றுள்ளது.முதல் இடத்தில் அமெரிக்கா அடுத்த இடத்தில் சீனா அதைத் தொடர்ந்து ஜப்பான் என பாரிஸ் ஒலிம்பிக்கில் முன்னனி வகிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts