• Home
  • Sports
  • 2024 பாரிஸ் ஒலிம்பிக் – வெள்ளி பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
Sports

2024 பாரிஸ் ஒலிம்பிக் – வெள்ளி பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா

33

2024 பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்குபெற்றவர் நீரஜ் சோப்ரா. இவர் இந்தியாவின் தங்கமகன் என்றும் அழைக்கப்படுவார். ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையும் இவரையே சேரும். இவர் 2021ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் 87.58 மீட்டர் நீளத்திற்கு ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். இப்பொழுது அதனை தொடர்ந்து 2024 பாரிசில் நடைபெறும் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் பாகிஸ்தானை சேர்ந்த வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு வீசி முதலாவது இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தொலைவிற்கு ஈட்டி வீசி இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். கிரெனெடா நாட்டைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் 88.54 மீட்டர் தூரத்திற்கு வீசி மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் . 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் நீரஜ் சோப்ரா இந்தியாவிற்க்கான முதல் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts