Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Sports
  • ஒலிம்பிக் தொடக்க விழாவை தொடர்ந்து இந்தியா பங்குபெரும் முதல் நாள் ஒலிம்பிக் போட்டிகளின் பட்டியல்
Sports

ஒலிம்பிக் தொடக்க விழாவை தொடர்ந்து இந்தியா பங்குபெரும் முதல் நாள் ஒலிம்பிக் போட்டிகளின் பட்டியல்

37

33 வது கோடைகால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வண்ணமயமாக நேற்று (ஜூலை 26) மாலை தொடங்கியது. சென் நதிக்கரையில் பிரபல பாடகியான ‘லேடி காகாவின்’ வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளில் ஆடல், பாடல் நிகழ்ச்சியுடன் தொடக்க விழா விமர்சையாக நடைபெற்றது. இது வரையில் இல்லாதது போன்று முதல் முறையாக நதிக்கரையில் ஒலிம்பிக் தொடக்க விழா நடைபெற்றது. படகுகளில் அழைத்து வரப்பட்ட வீரர்கள் அனைவரும் தங்கள் நாட்டு கொடிகளை ஏந்தி அணிவகுப்பு நடத்தினர்.
ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவை பாரிஸ் நகரில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் 80 பெரிய திரைகளில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

பிரான்சின் 16 நகரங்களில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. பாரிஸ் ஒலிம்பிக் 2024ல் பல நாடுகள் பங்கேற்றுள்ளன. உக்ரைன் மீது போர் தொடுத்து உள்ள ரஷ்யாவிற்க்கும், அதற்கு ஆதரவாக உள்ள நாடுகளும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தடை விதித்துள்ளது.

நேற்று ஒலிம்பிக் தொடக்க விழா விமர்சையாக முடிந்த நிலையில், இன்று (ஜூலை 27) ஒலிம்பிக் போட்டி தொடங்கி உள்ளது. முதல் நாள் ஒலிம்பிக் ஆட்டத்தில் இந்தியா 12 போட்டிகளில் பங்கேற்க உள்ளது.
முதல் நாள் இந்தியா பங்குபெரும் ஒலிம்பிக் போட்டிகளின் பட்டியல் ;

தகுதி சுற்று ஆட்டங்களில் சந்தீப் சிங் மற்றும் இளவேனில் , அர்ஜுன் பாபுதா மற்றும் ரமனிடா 10 மீட்டர் ஏர் ரைபில் கலப்பு இரட்டையர் பிரிவில் பங்கேற்கின்றனர். இப்போட்டி, இந்திய நேரப்படி பகல் 12:30 மணிக்கு துவங்க உள்ளது.

ஆடவர் ஒற்றையர் பாய்மர போட்டியில் பால்ராஜ் பன்வார் பங்கேற்கின்றனர். இந்த போட்டி, இந்திய நேரப்படி பகல் 12:30 மணிக்கு துவங்க உள்ளது.

10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதி சுற்று ஆட்டத்தில், அர்ஜுன் சீமா, சரப்ஜத் சிங் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்த ஆட்டம் பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.

பிற்பகல் 2 மணிக்கு, 10 மீட்டர் ஏர் ரைபில் போட்டியில், சந்தீல், இளவேனில் மற்றும் அர்ஜுன் பாபுதா, ரமனிடா ஆகிய இரண்டு கலப்பு இரட்டையர் அணி பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது.

டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவு ரவுண்ட் 1 ஆட்டத்தில் ரோகன் பூபன்னா, ஶ்ரீராம் பாலாஜி ஆகியோர் விளையாட உள்ளனர். இப்போட்டி பிற்பகல் 3:30 மணிக்கு துவங்கும்.

10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவு ஆட்டம், பிற்பகல் 4 மணிக்கு துவங்கும். இதில், மனு பாகெர், ரிதம் சங்வான் ஆகியோர் விளையாடுவார்கள்.

ஆடவர் பேட்மிண்டன் போட்டி குரூப் ஆட்டத்தில் லக்‌ஷயா சென் பங்கேற்க உள்ளார். இந்திய நேரப்படி இரவு 7:10 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.

டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில், ஹர்மீட் தேசாய் அவர்கள் பங்கேற்கின்றார். இந்த ஆட்டம், இந்திய நேரப்படி இரவு 7:15 மணிக்கு துவங்குகிறது.

ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் ஆட்டத்தில், சிராக், சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி பங்கேற்கின்றனர். இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்கும்.

ஆடவர் ஹாக்கி குரூப் ஆட்டத்தில், இந்தியாவும், நியூசிலாந்திற்க்கும் இடையில் பல பரிட்சை இன்று இரவு 9 மணிக்கு துவங்குகிறது.

பேட்மிண்டன் மகளிர் இரட்டையர் ஆட்டத்தில் தனிஷா கிராஸ்டோ, அஸ்வினி பொன்னப்பா ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 11:30 மணிக்கு துவங்க உள்ளது.

இறுதியாக, மகளிருக்கான 54 கிலோ பாக்சிங் குரூப் ஆட்டத்தில் ப்ரீத்தி பவார் பங்கேற்க உள்ளார். இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கு துவங்க உள்ளது. முதல் நாளிலே இந்தியா பதக்கம் வெல்லுமா என ஒரு ஆரவாரம் மக்களிடையே ஏற்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts