Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Sports
  • 33வது ஒலிம்பிக் இன்று பாரிஸில் கோலாகலமாக தொடக்கம், இந்தியா பதக்கம் வெல்லுமா என மக்கள் எதிர்பார்ப்பு?
Sports

33வது ஒலிம்பிக் இன்று பாரிஸில் கோலாகலமாக தொடக்கம், இந்தியா பதக்கம் வெல்லுமா என மக்கள் எதிர்பார்ப்பு?

50

ஒலிம்பிக் உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டியாகக் கருதப்படுகிறது. பல்வேறு விளையாட்டுகளுக்கு நடத்தப்படும் அனைத்துலகப் போட்டியாக உள்ளது ஒலிம்பிக். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த முறை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறுகின்றன. இது 33வது ஒலிம்பிக் போட்டியாகும். இன்று போட்டிகள் தொடங்கும் நிலையில் ஆகஸ்ட் 11ம் தேதி வரை 17 நாட்களுக்கு நடக்கிறது. 18 நாட்களில் 32 விளையாட்டுகளில் 329 போட்டிகள் நடத்தப்பட உள்ளன. பாரிஸ் நகரம் மட்டுமல்லாது பிரான்சின் பிற 16 நகரங்களிலும் போட்டிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன . இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் 10,714 போட்டியாளர்கள் பங்கேற்றிருக்கின்றனர். இந்த போட்டி பல வரலாற்று நிகழ்வுகளுடன் தொடங்கியுள்ளது. தொடக்க நிகழ்ச்சிகள் அனைத்தும் மைதானத்திற்கு வெளியே உள்ள பிரபல நதியான ‘சென்’ நதிக்கரையில் நடைபெறுகின்றன. நிகழ்ச்சியில் பங்கேற்கும் நாடுகளின் அணிகள் கப்பல்கள் மற்றும் படகுகளில் அழைத்து வரப்படுகின்றன.

ஒலிம்பிக்ஸின் பிறப்பிடமாகக் கருதப்படும் கிரீஸில் இருந்து சுமார் 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய ஒலிம்பிக் ஜோதி ஓட்டம், தற்போது இறுதிக்கட்டமாக பாரீஸ் நகரங்களில் வலம் வருகிறது. இந்த ஒலிம்பிக் ஜோதி இன்று நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் இணைந்து அந்த ஜோதி ஓட்டம் நிறைவுபெறும். இதனைத் தொடர்ந்து பிரம்மாண்ட தீபம் ஏற்றப்பட்டு போட்டி நடைபெறும் 17 நாள்களும் அந்த பிரம்மாண்ட தீபம் அணையாமல் எரியும்.

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பாக 117 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். அந்த வகையில் தமிழ் நாட்டிலிருந்து மட்டும் 13 விளையாட்டு வீரர்களும், அசாம் மாநிலத்திலிருந்து 1 வீரர் , பீகார் மாநிலத்தில் இருந்து 1 வீரர், சண்டிகர் மாநிலத்தில் இருந்து 2 வீரர், டெல்லியில் இருந்து 4 வீரர்களும், கோவாவில் இருந்து 1 வீரரும், குஜராத்திலுருந்து 2 வீரரும், ஹரியானாவில் இருந்து 24 வீரர்களும் , ஜார்கண்ட்டிலுருந்து 1 வீரரும் , கர்நாடகவில் இருந்து 7 வீரர்களும் , கேரளாவில் இருந்து 6 வீரர்களும் , மத்தியப்பிரதேசத்திலுருந்து 2 வீரர்களும், மகாராஷ்டிராவில் இருந்து 5 வீரர்களும் , மணிப்பூரில் இருந்து 2 வீரர்களும் , ஒடிசாவில் இருந்து 2 வீரர்களும் , பஞ்சாப்பில் இருந்து 19 வீரர்களும் , ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 2 வீரர்களும் , தெலுங்கானாவில் இருந்து 4 வீர்களும் , உத்தரகண்ட்டில் இருந்து 4 வீரர்களும் , உத்தர பிரதேசத்திலுருந்து 7 வீரர்களும் ,சிக்கீம் 1 வீரரும்,மேற்கு வங்கம் 3 வீரர்களும், ஆந்திர பிரதேசத்திலிருந்து 4 வீரர்களும் பங்கேற்கின்றனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலும் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவும் தேசிய கொடியை ஏந்தி இந்திய குழுவை வழிநடத்தி செல்கின்றனர்.

தமிழ்நாட்டில் இருந்து செல்லும் 13 வீரர்களின் பட்டியல் ,

சரத் கமல் , டேபிள் டென்னிஸ் வீரரான இவர், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தேசியக் கொடியை ஏந்திச் செல்லவிருக்கிறார். ஐந்தாவது முறையாக ஒலிம்பிக்கில் விளையாட உள்ளார்.
இளவேனில் வாலறிவன், கடலூரைச் சேர்ந்த இவர், பாரிஸ் ஒலிம்பிக்கில் தனிநபர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் மற்றும் கலப்பு 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் போட்டியிடுகிறார்.
நேத்ரா குமணன், சென்னையைச் சேர்ந்த இவர், பாய்மரப் படகுப் போட்டியில் இந்தியாவின் சார்பாக இரண்டாவது முறையாக பங்கேற்கிறார்.
விஷ்ணு சரவணன், பாய்மரப் படகுப் போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்க உள்ளார்.
சுபா வெங்கடேசன் 4000 மீட்டர் தொடர் ஓட்டத்தில் விளையாடத் தகுதி பெற்றுள்ளார்.
வித்யா ராம்ராஜ், 400 மீட்டர் தொடர் ஓட்டப் பிரிவில் பங்கேற்கிறார்.
ஜெஸ்வின் ஆல்ட்ரின், நீளம் தாண்டுதலில்,
ஆடவர் 4×400 மீட்டர் ரிலே போட்டியில் திருச்சியைச் சேர்ந்த ராஜேஷ் ரமேஷ்,
4X400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் சந்தோஷ் குமார் தமிழரசன், பங்கேற்க உள்ளார்.
துப்பாக்கி சுடுதலில் ஷாட்கன் பிரிவில் திருச்சியைச் சேர்ந்த பிருத்திவிராஜ் தொண்டைமான்
தடகளம் மும்முறை தாண்டுதல் பிரிவில் ஒலிம்பிக்கிற்கு முதல் முறையாகத் தகுதி பெற்றுள்ள பிரவீன் சித்திரவேல், டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் அனுபவம் வாய்ந்த ரோகன் போபண்ணாவுடன் களமிறங்கும் என். ஸ்ரீராம் பாலாஜி என தமிழகத்தைச் சேர்ந்த 12 பேர் பாரிஸ் ஒலிம்பிக்கில் களமிறங்குகின்றனர். டேபிள் டென்னிஸ் வீரரான சத்யன் ஞானசேகரன், மாற்று வீரராக பாரிஸ் செல்லும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இவருடன் மொத்தம் தமிழ்நாட்டிலிருந்து 13 வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கின்றனர். இந்த வருடம் , பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா அதிகமாக பதக்கம் வெல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts