Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • GOAT படத்தின் மூன்றாவது பாடலின் ரிலீஸ் தேதியை வெளியிட்டது படக்குழு
Movie Updates

GOAT படத்தின் மூன்றாவது பாடலின் ரிலீஸ் தேதியை வெளியிட்டது படக்குழு

24

தமிழ் திரையுலகின் முன்னனி நடிகரான விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் The Greatest Of All Time (GOAT). இந்த படத்திற்க்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது எனவே கூறலாம். இத்திரைப்படம் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் உருவாகியுள்ளது. யுவன் சங்கர் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் என்பதை இதன் டிரெய்லர் மூலம் அறியலாம். மேலும் இதில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல் அமீர், மோகன், ஜெயராம், யோகி பாபு, சினேகா, லைலா போன்ற முன்னனி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் மேலும், ஒரு சிறப்பாக மறைந்த விஜய்காந்த் அவரை AI தொழில்நுட்பத்தின் மூலம் திரைக்கு கொண்டுவந்துள்ளனர். இந்தப் படம் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்களில் வெளியிடப்படும் என படக்குழு முன்னதாகவே அறிவித்திருந்தது. ரசிகர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் GOAT படத்தின் இரண்டு பாடல்களும் வெளிவந்தது, அந்த இரண்டு பாடல்களும் விஜய் அவரின் குரலிலே வெளியிடப்பட்டது. தற்போது இப்படத்தின் மூன்றாவது பாடல் பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் மூன்றாவது பாடலின் புரோமோ இன்று மாலை 7 மணிக்கும், அதனைத் தொடர்ந்து பாடல் முழுவதும் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என படத்தின் தயாரிப்புக்குழு தனது x தளத்தில் பகிர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts