வருண் தேஜ் நடிப்பில், கருணா குமார் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் “மட்கா”. இப்படத்தில், மீனாட்சி சவுத்ரி, நோரா பதேஹி, நவின் சந்திரா, கிஷோர், அஜய்கோஷ், மைம் கோபி, ரவிசங்கர்.பி, கார்த்திகேய தேவ் ஆகியோர் முக்கியக்கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மட்கா திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கிறார். வைரா என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்தை மிகப்பெரிய அளவில் ஒரு ஆக்சன் திரில்லர் திரைப்படமாக உருவாக்குகின்றனர். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஒரு பான் இந்திய திரைப்படமாக உருவாக்கப்படுகிறது. இது, 1958-1982 களில் நடக்கும் ஒரு உண்மையான நிகழ்வில் இருந்து 24 வருடங்களுக்கு இக்கதைகளம் நீள்கிறது. இதன் ரிலீஸ் தேதி இன்னும் படக்குழு அறிவிக்கவில்லை. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இப்பொழுது வெளியிட்டுள்ளது. இதில், வருண் தேஜ் அவர்களின் தோற்றம் வயதானதாக காட்டப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் விரைவில் தியேட்டரில் வெளியாகுமென தயாரிப்புக் குழு அறிவித்துள்ளது.