Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • Minmini படத்தின் Trailer மற்றும் பாடல்கள் வெளியானது
Movie Updates

Minmini படத்தின் Trailer மற்றும் பாடல்கள் வெளியானது

79

இதனை Think music India தனது Youtube பக்கத்தில் வெளியிட்டது.

பூவரசம் பீப்பி, சில்லு கருப்பட்டி, ஏலே மற்றும் ‘லோனர்ஸ்’ போன்ற படங்களை இயக்கிய ஹலிதா ஷமீம் இந்த மின்மினி படத்தையும் இயக்கியுள்ளார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் இமயமலை லே லடாக்கில் கண்களுக்கு குளிர்ச்சியாக படமாக்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவை பிரம்மாண்ட ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா செய்துள்ளார்.

படத்தில் நடித்த நடிகர்களின் வயதையும், தோற்றத்தையும் பருவத்திற்கு ஏற்றார் போல் திரையில் காட்ட வேண்டும் என்பதற்காக எட்டு வருடங்களாக காத்திருந்து மின்மினி திரைப்படத்தை படக்குழு எடுத்து முடித்துள்ளது என்பது சிறப்பம்சம்.

இசையமைப்பாளராக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் அறிமுகமாகிறார். ஆங்கர் பே ஸ்டுடியோவுடன் இணைந்து மனோஜ் பரமஹம்சா இப்படத்தை தயாரித்துள்ளார்.

மின்மினி திரைப்படம் ஆகஸ்ட் 9 ஆம் தேதி திரைக்கு வரும் என பட நிறுவனம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts