நானி நடிப்பில், விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் “சரிபோதா சனிவாரம்”. தெலுங்கு திரைப்படமான இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல ,மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியிடப்படுகிறது. இதில், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, அதிதி பாலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துயுள்ளனர். இப்படத்திற்க்கு ஜேக்ஸ் பெஜாய் இசையமைத்துள்ளார். நேற்று மாலை இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது. அதில் இடம்பெற்றுள்ள இசையை ஜேக்ஸ் பெஜாய் அனல் தெறிக்கும் வகையில் அமைத்திருந்தார். ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சமில்லாமல் இந்த திரைப்படம் இருக்கும் என டிரெய்லரில் தெரிகிறது. கதையின் நாயகி பிரியங்கா மோகன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இருவரும் காவல் துறையில் பணியாற்றுகின்றனர். எப்பொழுதும் போல இந்த படத்திலும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அசாதாரனமாக நடித்துள்ளார். நானியின் ஆக்ஷன் காட்சிகளும் அனல் தெறிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆகஸ்ட் 29ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. நானி, எஸ்.ஜே.சூர்யாவின் காம்போ கலந்த இந்த ஆக்ஷன் திரைப்படம் ஒரு ப்ளக் பஸ்டர் திரைப்படமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.