Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • சர்தார் 2 படத்தில் மாளவிகா மோகனன், லேட்டஸ்ட் அப்டேட் அவரே வெளியிட்ட தகவல்
Movie Updates

சர்தார் 2 படத்தில் மாளவிகா மோகனன், லேட்டஸ்ட் அப்டேட் அவரே வெளியிட்ட தகவல்

36

சர்தார் திரைப்படம் கார்த்திக் நடிப்பில் 2022 ம் ஆண்டு வெளியானது, இதனை, பி. எஸ். மித்திரன் இயக்கியிருந்தார், இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இவருடன் ராசி கன்னா, ரஜிஷா விஜயன், சங்கி பாண்டே, லைலா, ரித்விக், யூகி சேது, அவினாஷ், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்தப் படம் ஒரு ஆக்சன் படமாக அமைந்திருந்தது. அதன் வெற்றியை தொடர்ந்து சர்தார் இரண்டாம் பாகம் எடுக்கலாம் என முடிவு செய்து படக்குழு படப்பிடிப்பை தொடங்கியது. சர்தார் 2வையும் பி.எஸ். மித்திரன் அவரே இயக்கிவருகிறார். கார்த்திக், ராஷி கன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதன் இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட அதிகமான ஆக்‌ஷன் காட்சிகளை பெற்றிருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் படப்பிடிப்பின் போது இந்த திரைப்படம் நிறைய பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்தது. இப்பொழுது இந்தப் படத்தில் ஒரு கதாப்பாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடிக்கயுள்ளதாக அவர் x தளத்தில் பகிர்ந்துத்துள்ளார். மேலும் அந்த பதிவில் என்னுடைய பிறந்தநாள் வாரமான இந்த வாரம் மிகவும் நன்றாக தொடங்கியுள்ளாது எனவும், இந்தப் படத்தில் இனைந்து இருப்பது மிகவும் சந்தோசமாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts