விக்ரம் நடிப்பில், பா.ரஞ்ஜித் அவர் இயக்கியுள்ள திரைப்படம் “தங்கலான்”. இந்த திரைப்படத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து, டேனியல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இந்த திரைப்படம் முழுவதும் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை பற்றி கூறுகிறது. இதற்கு ஜி.வி.பிரகாஷ் அவர்கள் இசையமைத்துள்ளார். இந்தப் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என இந்த படத்தை தயாரித்த studio green நிறுவனம் வெளியிட்டது. அந்த வகையில் தங்கலான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் இந்தப் படத்திற்க்கான முன்பதிவு இன்று (அகஸ்ட் 10) முதல் தொடங்குகிறது.