Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Upcoming Events
  • Completed Event
  • நான்கு தேசிய விருதுகளை பெற்ற மணிரத்னத்தின் பிரமாண்ட திரைப்படம்
Completed Event

நான்கு தேசிய விருதுகளை பெற்ற மணிரத்னத்தின் பிரமாண்ட திரைப்படம்

30

வரலாற்று நிகழ்வுகளை வைத்து எழுதப்பட்ட கல்கியின் படைப்புதான் பொன்னியின் செல்வன் என்னும் நாவல். இதை, ஐந்து புதினங்களாக கல்கி அவர்கள் எழுதியுள்ளார். இந்த நாவலை படித்தவர்கள் யாரலும் இதன் காட்சியிலிருந்து அவ்வளவு எளிதில் வந்துவிட முடியாது. இந்த நாவலை திரைக்கதையில் கொண்டு வர வெண்டுமென நிறைய இயக்குனர்கள் நினைத்தனர். ஆனால்,  மணிரத்னம் அவர்கள் தான் இதை திரைக்கதையில் கொண்டு வந்தார். 2022ல் பொன்னியின் செல்வன் 1 பாகமும், 2023ல் பொன்னியின் செல்வன் 2 பாகமும் வெளிவந்தது. மிகவும் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. இவ்விரு திரைப்படங்களும் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தினை மையமாக வைத்து சில மாற்றங்களுடன் வெளிவந்தன. இந்த திரைப்படத்திற்க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். ஒவ்வொரு ஆண்டும் இந்திய மொழிகளில் உருவாகும் திரைப்படங்களுக்கு மத்திய அரசால் தேசிய விருது வழங்கப்படும், அந்த வகையில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்க்கு 4 தேசிய விருதுகள் வழங்கபட்டது. சிறந்த தமிழ் திரைப்படம், ஏ.ஆர்.ரஹ்மானின் சிறந்த பின்னணி இசைக்காகவும், சிறந்த ஒலி அமைப்புக்காக ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும், சிறந்த ஒளிப்பதிவிற்க்காக ரவிவர்மன் அவர்களுக்கும் என 4 விருதுகள் வழங்கப்பட்டன. ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இசையமைப்பாளர்களில் அதிகப்படியான தேசிய விருதை வென்ற நபர் என்ற பெருமையையும், பொன்னியின் செல்வன், திரைப்படத்தின் இசையமைப்பிற்க்காக 7வது முறையாக தேசிய விருதை வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts